Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.12.2025)| 6 PM Headlines | ThanthiTV

Update: 2025-12-27 13:00 GMT
  •  தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்... பெயர் நீக்க ஆயிரத்து 726 விண்ணப்பம் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...
  • வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியையொட்டி, 234 தொகுதிகளுக்கும் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5  முதல் 15 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்...
  • உக்ரைன் தலைநகர் கீவ்-இல் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.. நாளை அமெரிக்காவில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது...
  • நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் கடற்கரையில், ராக்கெட் வடிவ மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது... காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்...
  • புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து நாடு முழுவதும் சப்ளை செய்த விவகாரம்.... போலி மருந்து விவகாரத்தில் 23 பேர் கைதான நிலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்