Chennai | சென்னையில் டீ குடிக்க சென்ற கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
சென்னை அடுத்த பூந்தமல்லியில், சரக்கு வாகனம் மீது பைக் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். டீ குடிப்பதற்காக சென்ற போது, பாரிவாக்கம் சிக்னல் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்த நிர்மல், சந்தோஷ் இருவரும் திருவேற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டே, பகுதிநேரமாக லோடு ஏற்றும் வேலையும் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.