சென்னை தாம்பரத்தில், கடலூரை சேர்ந்த பிரபு என்பவர், ஆட்டோவில் விளம்பரம் செய்து பெண் தேடும் வீடியோ வைரலாகி வருகிறது. பெற்றோர் பெண் தேடியும் கிடைக்காததால், அவர் இந்த நூதன முறையை கையாண்டுள்ளார். விளம்பரம் செய்தது மட்டுமின்றி கையில் தாலியுடனே பல ஊர்களுக்கு சென்று வருகிறார்.