"எங்க வயிறு எரியுது" | திருவண்ணாமலையில் விவசாயிகள் தொடர் போரட்டம்

Update: 2025-07-03 16:46 GMT

சிப்காட் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போரட்டம்

திருவண்ணாமலையில் மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து,சிப்காட் நில எடுப்பு அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால்

பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள,11 கிராமங்களை சேர்ந்த சுமார் 3174 ஏக்கர் விளை நிலங்களை,மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்காக தமிழக அரசு கையகப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால்,சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிடுமாறு,தொடர் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் போரட்டத்தில் ஈடுபட வந்த விவசாயிகளை,போலீசார் கயிறு கட்டி தடுத்ததால்,வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்