101st birthday celebration || 101 வது பிறந்தநாள் கொண்டாடும் ஊட்டியின் மாடல் அழகி
101வது பிறந்த நாளை கொண்டாடிய ஆங்கிலோ-இந்திய மாடல்
நீலகிரி மாவட்டம் உதகையில், ஆங்கிலோ-இந்திய மாடல் அழகி ஒருவர் தன் 101வது பிறந்த நாளை கொண்டாடியிருப்பது, பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதகையை சேர்ந்தவர் டேவ்னி சாம்சன். இங்கிலாந்தை பூர்விகமாக கொண்ட இவர், 1924ம் ஆண்டு இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். 1950ம் ஆண்டு மும்பையில் நடந்த மாடல் அழகி போட்டியில் பங்கு பெற்று பட்டம் வென்றவர். தனது 94 வயது வரை நீலகிரியில் உள்ள நூலகத்தில் பணியாற்றி வந்தார். டேவ்னி சாம்சன் தற்போது தனது 101வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இவரது நூறாவது பிறந்த நாளின் போது, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கடிதம் ஒன்றையும் தனது புகைப்படங்களையும் அனுப்பி வாழ்த்து சொன்னார். இவரது பிறந்த நாள் விழாவில் அக்கம் பக்கத்தினர் பலரும் கலந்து கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.