Nilgiris | Cylinder | பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய சிலிண்டர்.. அலறியடித்து ஓடிய மக்கள்
உதகை - கோத்தகிரி சாலையில் உள்ள முருகன் டீ ஸ்டாலில் 2 சிலிண்டர் வெடித்து, 4 சிலிண்டர்கள் தீப்பற்றிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மல்லிகா என்ற பெண் தீக்காயம் அடைந்தார். மேலும், கணவன் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயை அணைத்தபோதே அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்ததால், தீயணைப்பு வீரர்கள் திண்டாடினர். தீயணைப்பு படையினரின் தண்ணீர் தீர்ந்து போனதால், தனியார் லாரியின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. சிலிண்டர் வெடித்து தீப்பற்றியதில் கடை முழுவதும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் காரணமாக கோத்தகிரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.