Nilgiri | சத்தமில்லாமல் மறைந்திருந்து தாக்கிய அரக்க ரூபம்.. பாத்ரூம் சென்றவருக்கு நேர்ந்த சோகம்
யானை தாக்கி படுகாயமடைந்த யானை பாகன் - மருத்துவமனையில் அனுமதி
நீலகிரி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த 80 வயதான மதன்குமார், இயற்கை உபாதை களிக்க கழிப்பறைக்கு சென்றபோது, கழிப்பறை அருகே மறைந்திருந்த காட்டு யானை தாக்கி பலத்த காயமடைந்த நிலையில், கூடலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதுமலை தெப்பக்காட்டில் யானை பாகனாக இருந்த மதன்குமார் காட்டு யானையால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.