வர்த்தகத்தில் அடுத்த பாய்ச்சல் - பிரதமர் மோடியோடு கை கோர்த்த ஃபிஜி பிரதமர்
வர்த்தகத்தில் அடுத்த பாய்ச்சல் - பிரதமர் மோடியோடு கை கோர்த்த ஃபிஜி பிரதமர்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஃபிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா Sitiveni Rabuka சந்தித்துப் பேசினார்.
3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஃபிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, ஃபிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா சந்தித்துப் பேசினார்.
அப்போது இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.