ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர்.. நெல்லையை அதிர வைக்கும் திருவிழா.. தயார் செய்யும் பணியில் தீவிரம்

Update: 2024-05-26 12:38 GMT

நெல்லையில் வரும் 13-ம் தேதி, நெல்லையப்பர் கோவில் ஆணித்திருவிழா, கொண்டாட உள்ள நிலையில், தேர் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.

ஆணிப் பெரும் திருவிழா வரும் 13ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. ஒன்பதாம் திருநாள் அன்று ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி தேர் நான்கு ரத வீதிகளிலும் வளம் வரும். இந்த தேர் சுமார் 450 டன் எடை கொண்டது. திருவிழாவின் போது சுவாமி நெல்லையப்பர் தேர் உட்பட ஐந்து தேர்கள் நெல்லை டவுன் நான்கு வீதிகளிலும் வளம் வருவது வழக்கம். இந்த நிலையில் தேர் சரி செய்யும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தேர் செல்லும் சாலையில் தோண்டப்பட்ட குழிகளை சரி செய்ய

பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்