திடீரென உயிரிழந்த தந்தை.. வணங்கிவிட்டு பொதுதேர்வு எழுத சென்ற மாணவி..நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2025-03-11 12:43 GMT

திசையன்விளை அருகே, தந்தை இறந்த நிலையில், மாணவி பொதுத்தேர்வுக்கு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை. 55 வயதான இவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் அவரது மகள் மதுமிதா, தந்தையின் உடலை வணங்கிவிட்டு பொதுத் தேர்வுக்கு கிளம்பிச்சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்