Namakkal Car Snake | காரின் சைடு மிரரில் எட்டி பார்த்த கொம்பேறி மூக்கன் - அதிர்ந்து போன ஓனர்
நாமக்கல் சேலம் சாலையில் ஒரு காரின் சைடு மிரரில் ஒளிந்திருந்த பாம்பு வெளியில் தப்ப முயலும் அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகியுள்ளன... கார் சேலம் சாலை முருகன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது சிறிய கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்த பாம்பு ஒன்று ஓட்டுநர் இருக்கையின் அருகே இருந்த சைடு மிரரில் இருந்து வெளியே வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காரில் இருந்த தம்பதி இதை வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.