`நல்லது செய்ய நினைத்ததால்..' - US ரிட்டனுக்கு நேர்ந்த கொடூரம்-போதை கும்பலின் நடுங்க வைக்கும் வீடியோ

Update: 2024-12-10 17:07 GMT

நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் இவர், தற்போது விடுமுறைக்காக சொந்த ஊரான நாகூருக்கு வந்துள்ளார். இவரது வீடு அருகே பூட்டிக்கிடக்கும் இல்லத்தில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் போதை வஸ்துகளை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனை கண்ட ஷேக் அலாவுதீன், இளைஞர்களின் பெற்றோர்களிடம் பிள்ளைகளை கண்டித்து வைக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஷேக் அலாவுதீன் மீது கோபம் கொண்ட அந்த இளைஞர்கள், நாகூரில் தொழுகை முடிந்து பள்ளிவாசலை விட்டு வெளியே வந்த அவரை சூழ்ந்து கொண்டு தாக்க தொடங்கினர். பெற்றோரிடம் போட்டுக் கொடுப்பாயா என கேட்டு சரமாரியாக கீழே போட்டு புரட்டி எடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த அலாவுதீன் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சேக் அலாவுதீனை இளைஞர்கள் கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்