பாஜகவை முருகர் `சூரசம்ஹாரம்' செய்வார்" செல்வப்பெருந்தகை பரபரப்பு பேச்சு

Update: 2025-06-08 09:15 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு பேசினார். அப்போது,

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக முறையில், தமிழ்க் கடவுள் முருகன் சூரசம்ஹாரம் செய்வார் எனப் பேசினார். எல்.ஐ.சி. நிதியை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தது, தமிழ்நாட்டிற்கு நிதியை ஒதுக்காதது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளை அவர் விமர்சித்துப் பேசினார். மேலும், முருகனுக்கும் சங் பரிவாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பாஜகவின் பிரிவினைவாத அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்