யூடியூபர் முக்தாருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்
கன்னியாகுமரியில் பிரபல யூடியூபர் முக்தாருக்கு எதிராக காவல்நிலையத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர். காமராஜர் குறித்து யூடியூபர் முக்தார் உண்மைக்கு புறம்பான தகவல்களை பகிர்வதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவை கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், விளவங்கோடு எம்.எல்.ஏ தாரகை கத்பட், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இணைந்து கூட்டாக வழங்கினர்.