Cuddalore | "வயசானவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க.. ரொம்ப சிரமமா இருக்கு.." - குமுறும் கடலூர் மக்கள்

Update: 2025-12-13 08:36 GMT

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதம்பரம் பழைய பேருந்து நிலைய கட்டிடம் அமைக்கப்பட்டு 40 ஆண்டுகளை கடந்த நிலையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து யணிகளின் மேல் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதனை அடுத்து பயணிகள் கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக பேருந்து நிலையத்தில் ஷட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

மழை உள்ளிட்ட காரணங்களால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால்

கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் கூறுகையில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்