ரூ.7 லட்சம் கடனில் சிக்கி தவித்த பெண்ணிடம் ரூ.65 லட்சத்தை லவட்டிய ஆசாமி

Update: 2025-03-31 03:31 GMT

சென்னையில் கடனில் தவித்த பெண்ணிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் பணம் பெற்று தருவதாக கூறி 65 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் ஜமுனா. இவருக்கு ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜமுனா ஏழு லட்ச ரூபாய் கடனில் இருப்பதை பயன்படுத்தி, ஆன்லைன் டிரேடிங் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறிய ஹரிஷ், ஜமுனாவின் ஆவணங்களை வைத்து பல வங்கிகளில் 65 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்த ஜமுனா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஹரிஷ் மற்றும் லோன் ஏ​ஜென்ட் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்