14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றத்துக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சிறுமியின் தந்தையை பிரிந்த தாய் டீ மாஸ்டருடன் தகாத உறவில் இருந்த நிலையில், அந்த டீ மாஸ்டர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை வெளியில் சொல்லகூடாது என பெற்ற குழந்தையை தாயே மிரட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய் மற்றும் டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நிலையில், இவர்களது மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.