அமைச்சர் KN நேருவை நேரடியாக சாடிய MLA பழனியாண்டி - கூட்டத்தில் சலசலப்பு
திருச்சியில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய ஸ்ரீரங்கம் M.L.A. பழனியாண்டி, அமைச்சர் K.N.நேருவை நேரடியாக சாடினார்.
திருச்சி எம்பி துரை வைகோ, கரூர் எம்பி ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சூழலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் கண்ணுடையான்பட்டி சமுத்திரபாலம் கட்டுவதற்கு வந்த திட்டத்தை, மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு தாரைவார்க்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியது, கூட்ட அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, தனது உரை திரித்து வெளியிடப்பட்டுள்ளதாகவும், தனக்கு வருத்தம் உள்ளதாக தான் கூறியதாகவும், அமைச்சருக்கும், தனக்கும் வருத்தம் உள்ளதாக கூறவில்லை என்று M.L.A. பழனியாண்டி விளக்கம் அளித்துள்ளார்.