சிவந்தி ஆதித்தனார் 12-வது நினைவு நாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை

Update: 2025-04-19 08:33 GMT

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 12-வது நினைவு நாளையொட்டி, திருச்செந்தூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. வீரபாண்டியன் பட்டினம் சாலையில் அமைந்துள்ள பத்மஸ்ரீ டாக்டர் அய்யா சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் வருவாய் கோட்டாச்சியர் சுகுமாறன் மற்றும் வட்டாச்சியர் பால சுந்தரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, பல்வேறு முக்கிய பிரமுகர்களும், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்