சாதி பெயரை சொல்லி இழிவாக பேசிய வழக்கு | போலீசார் எடுத்த அதிரடி முடிவு

Update: 2025-04-28 13:07 GMT

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரத்தில், பட்டியல் இன மக்களை சாதி பெயரை சொல்லி இழிவாக பேசியதாக 66 பேர் மீது 7 பிரிவின் கீழ், வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம், பட்டியல் இன மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 17ஆம் தேதி, சாமி தரிசனம் செய்த பட்டியல் இன மக்களை, குறிப்பாக பெண்களை அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பலரும் சாதி பெயரை சொல்லி, கடுமையாக சாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்