சீர்காழியில் புது கல்யாண ராணி.. 4 கல்யாணம் பண்ணி... இறுதியில் வெளியான பகீர் தகவல் - நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு

Update: 2025-01-27 09:16 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், திரைப்பட பாணியில் 4 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். திட்டை ஊராட்சியை சேர்ந்த சிவசந்திரன் என்பவர், நிஷாந்தி என்பவரை திருமணம் செய்தார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்ட நிலையில், புத்தூர் வாய்க்காங்கரை தெருவை சேர்ந்த நெப்போலியன் என்பவர், சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கடந்த 2017-ம் ஆண்டு மீரா என்ற பெயரில் அறிமுகமான அந்தப் பெண்ணை தான் திருமணம் செய்த நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். லட்சுமி என்ற நிஷாந்தியை போலீசார் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. லட்சுமிக்கும், சிலம்பரசன் என்பவருக்கும் 2010ம் ஆண்டில் திருமணம் நடந்து, மகன் மற்றும் மகள் உள்ளது தெரியவந்தது. கணவர் இறந்த நிலையில், தனது பெயரை மாற்றி திருமண மோசடியில் ஈடுபட்டதும், 12 ம் வகுப்பு மட்டுமே படித்த நிலையில் மருத்துவர் எனக்கூறி பல ஆண்களை ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து, லட்சுமியை நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்