3வது குழந்தை மகப்பேறு விடுப்பு மறுப்பு... உச்சநீதிமன்றம் ரத்து
அரசுப் பள்ளி ஆசிரியைக்கு மூன்றாவது குழந்தை மகப்பேறு விடுப்பை மறுத்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை உமாதேவியின் இரு குழந்தைகளும், பெற்றோரின் மணமுறிவு காரணமாக தந்தையிடம் சென்று விட்டனர். இதையடுத்து, மறுமணம் புரிந்து மூன்றாவது குழந்தை பெற மகப்பேறு விடுப்பு கோரிய உமாதேவியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து உமாதேவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மகப்பேறு விடுப்பு, குழந்தை பெறும் உரிமையின் அங்கம் என குறிப்பிட்டு, இரு குழந்தைகளுக்கு மட்டுமே அரசின் கொள்கை பொருந்தும் என்றுகூறி, அரசுப் பள்ளி ஆசிரியைக்கு 3வது குழந்தை மகப்பேறு விடுப்பை மறுத்த உத்தரவை ரத்து செய்தது.