ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு பகுதியில் இருந்து கடந்த 17ஆம் தேதி விசைப்படகு மூலம் நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்
இதில் மண்டபம் சேது நகர் பகுதியைச் சேர்ந்த சீனி இப்ராம்ஷா என்பவர் மீன்பிடித்து கொண்டிருந்த பொழுது சூறாவளி காற்று மற்றும் படகில் ஏற்பட்ட பழுது காரணமாக படகு கடலில் மூழ்கியதில் மூன்று பேர் உயிர் தப்பினர் சீனி இப்ராம்ஷா கடலில் மாயமான நிலையில் அவரை தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது
இந்த நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று அவரது உடல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கடலோர காவல்படை மற்றும் போலீசார் இணைந்து உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்