மதுரை மீனாட்சியை காண வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் | Madurai Meenakshi Temple
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சாமி தரிசனம் செய்தார்.
உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் வருகை தந்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு செய்த அவர் பொற்றாமரை குளத்தில் நின்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.