பைக் மீது மோதிய லாரி - பேரனை காப்பாற்றி உயிரை விட்ட பாட்டி..மதுரையில் அதிர்ச்சி
மதுரை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் துப்புரவு பணியாளரின் மனைவி பலியான நிலையில், லாரி ஓட்டுநரை கைது செய்யக்கோரி உறவினர்கள் கப்பலூர் சுங்கசாவடி பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பெரியசாமி தனது மனைவி மற்றும் பேரனுடன் பைக்கில் கடைக்கு சென்றுள்ளார். அப்போது மொட்டமலையில் பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. சுதாரித்து கொண்ட மகேஷ்வரி தனது பேரனை தூக்கி சாலையோர மண் தரையில் வீசிய நிலையில் கீழே விழுந்த அவர் தலையில், லாரி சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே உறவினர்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கபட்ட நிலையில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.