குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை

Update: 2025-06-12 04:20 GMT

குன்னூரில் வீட்டு வாசலில் படுத்திருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்வி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர், எடப்பள்ளி இந்திரா நகர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயை வேட்டையாடி வாயில் கவ்வி தூக்கிச் சென்றது. இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடப்பதால், ஊருக்குள் வலம்வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்