கூடவே இருந்து குழி பறித்த ஜூனியர் வழக்கறிஞர்ரத்த வெள்ளத்தில் துடி துடித்த சீனியர்

Update: 2025-04-28 11:27 GMT

கரூரில், மூத்த வழக்கறிஞரை வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்தி, 6 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த அவரது ஜுனியர் வழக்கறிஞர் உட்பட 3 பேரை, 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். சுங்ககேட் பகுதியில் வசிக்கும் 71 வயதாகும் வழக்கறிஞர் ஆறுமுகத்தின் வீட்டிற்குள், முகத்தில் மாஸ்க் அணிந்து கத்தியுடன் நுழைந்த 3 பேர், ஆறுமுகத்தை தாக்கி வீட்டில் இருந்த 6 லட்சம் ரூபாய், தங்கச் செயின்கள் மற்றும் தங்கக்காசுகளை கொள்ளையடித்தனர். இதில் காயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின்பேரில், சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், ஆறுமுகத்திடம் ஜுனியர் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்த ராஜீவ்காந்தி மற்றும் அவரது நண்பர்கள் இருவரை கைது செய்து, பணம் மற்றும் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்