இரும்பு கம்பெனி ஓனரை வட்டாட்சியர் முன்னிலையிலேயே உதைத்த ஊ.ம.தலைவரின் கணவர்
குன்றத்தூர் அருகே, இரும்பு கம்பெனி உரிமையாளரை, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் காலால் எட்டி உதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. இரண்டாம் கட்டளை ஊராட்சி, ராகவேந்திரா நகர் பகுதியில், மதன் எனபவரது இரும்பு குடோன் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில், அதுகுறித்த புகாரை விசாரிக்க வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா தேவியின் கணவர் சுகுமாரும் வந்திருந்தார். அப்போது மதன் மற்றும் சுகுமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சுகுமார், மதனை காலால் எட்டி உதைத்துள்ளார். இதுதொடர்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.