500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலில் கும்பாபிஷேக விழா - புனித நீர் தெளித்த ட்ரோன்கள்

Update: 2025-07-07 14:07 GMT

500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலில் கும்பாபிஷேக விழா - பக்தர்கள் மீது புனித நீர் தெளித்த ட்ரோன்கள்

புதுக்கோட்டை அருகே பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. சேந்தன்குடி ஜெயநகரத்தில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற இந்த விழாவில், புனித நீரானது விமானக் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், கலந்து கொண்ட பக்தர்கள் மீது ட்ரோன்கள் மூலமாக புனித நீரும், மலர்களும் தூவப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்