கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் தனியார் அலங்கார செடி கடையில் பணிபுரிந்த பெண்ணை
கொலை செய்துவிட்டு, அவரது நகைகளை திருடிச்சென்ற வழக்கில் குமரியை சேர்ந்த ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் 7வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரசூண் மோகன், ராஜேந்திரனுக்கு தூக்கு தண்டனையும், 4 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார். ஏற்கனவே ராஜேந்திரன் மீது 3 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.