Kovai Issue | கோவை கொடூரம்.. அகற்றப்பட்ட புல்லட்ஸ் - 3 காம மிருகங்களுக்கு ஆபரேஷன்
கோவை, கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட இருவர் உட்பட அனைவரும் நலமுடன் உள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆண் நண்பர் தலையில் காயம் ஏற்பட்டு , சிகிச்சை பெற்று வருகிறார் என்றும்,அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் குணா, கார்த்தி, சதீஷ் ஆகிய மூன்று பேருக்கும் காலில் இருந்த குண்டுகள் அகற்றப்பட்டு, ரத்த நாள அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு முறிவுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.