Kovai | 100க்கும் மேற்பட்ட குடும்பங்களின் கண்ணீருக்கு காரணம் இவர் ஒருவர்தானா?

Update: 2025-10-09 06:35 GMT

கிரிப்டோகரன்சியில் முதலீடு என மோசடி - ஹேமந்த் பாஸ்கர் மீது புகார்

கோவையில், அமெரிக்க நிறுவனத்தின் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஏமாற்றியதாக ஹேமந்த் பாஸ்கர் என்பவர் மீது கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வாட்ஸ்அப் குழு அமைத்து, அதில் அனுப்பிய லிங்க் மூலம் ஆப் ஒன்றை டவுன்லோடு செய்து, ஆயிரம் முதல் 3 ஆயிரம் டாலர் வரை முதலீடு செய்ய வைத்ததுடன், பின்னர் பலரையும் முதலீடு செய்ய வலியுறுத்தியதாக தெரியவருகிறது. மேலும், பலரிடம் இருந்து நகைகளையும் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள், தங்கள் பணத்தை மீட்டுத் தரவும், ஹேமந்த் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்