வீல்சேர் விவகாரம் - சிசிடிவி ஆதாரத்தை வெளியிட்ட அரசு மருத்துவமனை
கோவை அரசு மருத்துவமனையில் வீல்சேர் வழங்கப்படவில்லை என வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் சம்பவத்தன்று பதிவான சிசிடிவி காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 10-ம் தேதி அரசு மருத்துவமனையில், வீல்சேர் வழங்காமல் 100 ரூபாய் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியானது. இதையடுத்து நோயாளியின் உறவினர், வேண்டுமென்றே நோயளியின் கையில் இருந்த வாக்கரை பலவந்தமாக அகற்றியும், நோயளியை அவர் தூக்கிச் செல்வது போல, செல் போனை ஆட்டோ ஓட்டுநரிடம் கொடுத்து வீடியோவும் எடுத்து உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது. அதேபோன்று தற்போது வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சியில் வலுக்கட்டாயமாக வாக்கரை அகற்றி விட்டு, நோயாளியை இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.