வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு, மே 15 அன்று வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கெங்கை அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒன்றாம் தேதி சிரசு திருவிழா விமர்சையாக நடைபெறும். இதில் தமிழகம் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம் என்ற நிலையில், அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கு பதிலாக ஜூன் 14ஆம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது