Karur Stampede | Vijay Campaign | Actor Ranjith| கரூர் சம்பவம்-சட்டம் வகுக்க நடிகர் ரஞ்சித் கோரிக்கை
கரூர் சம்பவம் போன்ற நிகழ்வுகளை தவிர்க்க கட்டமைப்பு மற்றும் சட்டங்களை உருவாக்க வேண்டும் என நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புடன் சேர்ந்து நடிகர் ரஞ்சித் வேல் பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டமைப்பு மற்றும் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.