மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு என்ன நடந்தது? - அதிர்ச்சியூட்டும் காட்சி
கரூர் அருகே மகாதானபுரத்தில், பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், மருத்துவமனை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.