``நியூஸ் போடாம இருக்கணும்னா காசு குடு’’ - 8 Fake பத்திரிகையாளர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்
குமரி மாவட்டம் ஐரேனிபுரம் பகுதியில் நகை அடகு கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி பத்திரிகையாளர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் அடகு நகைக்கடை நடத்தி வரும் ஜஸ்டின் ராஜ் என்பவர் அதிக வட்டி வசூலிப்பதாக கூறி மிரட்டிய நபர்கள், இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியிடாமல் இருக்க ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், மிரட்டல் விடுத்தல் கும்பலை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் போலி பத்திரிகையாளர்கள் என்பதும், இதுபோல் பல்வேறு நபர்களிடம் அவர்கள் மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.