Kanyakumari Marriage Issue | கல்யாணம் முடிந்த 18வது நாளில் பேரதிர்ச்சி கொடுத்த புதுப்பெண்
செம்பொன்விளை பகுதியை சேர்ந்த விஜய் என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த சுஜிதா என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன 18வது நாளில் சுஜிதா வீட்டை விட்டு மாயமானார். பின்னர் தனது கணவருக்கு, வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பிய அவர், “பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்துகொண்டேன்... 7 சவரன் தாலியை வீட்டில் கழற்றி வைத்துள்ளேன்...“ என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.