kallakurichi News | விசாரணைக்கு சென்ற இடத்தில் சிறுமியிடம் அத்துமீறிய தலைமை காவலர்
கள்ளக்குறிச்சியில் விசாரணைக்கு சென்ற இடத்தில் சிறுமியிடம் அத்துமீறிய தனிப்பிரிவு தலைமை காவலர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகேயுள்ள வெள்ளிமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த பெட்டிக்கடைக்கு சென்ற தனிப்பிரிவு காவலர் பிரபு, அங்கு தனிமையில் இருந்த 17 வயது சிறுமியிடம் அத்துமீறி நடக்க முயன்றதாகவும், அப்போது அந்த சிறுமி, காவலர் பிரபுவை கீழே தள்ளிவிட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், விழுப்புரம் டிஐஜி அலுவலகத்தில் புகாரளிக்கவே, விசாரணைக்கு பிறகு, தனிப்பிரிவு தலைமை காவலர் பிரபு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.