#JUSTIN || திருப்பூரில் விஷவாயு தாக்கி இருவர் பலி - சாயக்கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது சோகம்

Update: 2025-05-19 16:07 GMT

#JUSTIN || திருப்பூரில் விஷவாயு தாக்கி இருவர் பலி - சாயக்கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது சோகம்

திருப்பூர்: சாய ஆலை கழிவு தொட்டி சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட 2 பேர் பலி. 3 பேர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஆலையா டையிங் பேக்டரி நிறுவனத்தில் சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளனர் இதில் தொட்டிக்குள் இறங்கிய ஐந்து பேர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தனர். அவர்களை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் இதில் சரவணன், வேணுகோபால் என்ற இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் மேலும் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்