தமிழகத்தில் கற்பனைக்கும் எட்டாத மிகப்பெரிய மோசடி.. கண்டுபிடித்த IT

Update: 2025-03-30 10:06 GMT

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர் மிகப்பெரிய வருமான வரி மோசடி செய்துள்ளதாக வருமான வரி புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவோர், சார்ட்டட் அக்கவுண்டன்ட் தரகர்கள் கூட்டு சேர்ந்து மோசடி செய்துள்ளதாகவும், போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து வரி ஏய்ப்பு மற்றும் வருமான வரி திரும்பப்பெறுதல் மோசடி நடந்துள்ளதாகவும் கூறியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வருமான வரி மோசடி செய்துள்ளதாகவும்,

22 ஆயிரத்து 500 வரிசெலுத்துவோர், போலி ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 500 கோடி வரை வருமான வரியை திரும்ப பெற விண்ணப்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், மோசடியாக வருமான வரியை திரும்பப்பெறுதல் 101 கோடி ரூபாய் தாண்டி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. போலியான நன்கொடை ரசீதுகள், போலியாக மருத்துவச் செலவை திரும்பப்பெற விண்ணப்பித்தல், போலியான வீட்டு வரி ஒப்பந்தங்களை காட்டி மோசடி நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்