மதுபோதையில் ஆம்புலன்ஸ் முன்பு விழுந்த `குடிமகன்' - நூலிழையில் உயிர்பிழைத்த நபர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மதுபோதையில் ஆம்புலன்ஸ் முன்பாக ஒருவர் தள்ளாடி விழுந்தார். முன்சீப் கோர்ட் சாலையில் தனியார் ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த அந்த நபர் நிலைதடுமாறி ஆம்புலன்ஸ் முன்பாக விழுந்தார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்த்தப்பினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.