வீட்டின் பூட்டை உடைத்து சடலத்தை வைத்த சம்பவம்-ஒருவர் மண்டை உடைப்பு
சென்னை போரூரில், இறந்த சகோதரனின் உடலை வீடு பூட்டை உடைத்து வைத்ததாகக் கூறி ஏற்பட்ட குடும்ப தகராறு கைகலப்பில் முடிந்தது. சிதம்பரம் என்பவரின் வீட்டில், அவரது அண்ணன் செல்வத்தின் உடலை அவரது மகன் சண்முகம் அனுமதியின்றி வைத்ததாக கூறி, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிதம்பரத்தின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில், போலீசார் நடவடிக்க எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.