சக மாணவனையும் ஆசிரியரையும் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவர் சீர்திருத்த குழுமத்தில் நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணை நடைபெற்ற நிலையில் வரும் 29ஆம் தேதி வரை 14 நாட்கள் அவரை சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தகுதியான நபர்களைக் கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது