திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Update: 2025-06-19 02:15 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செந்தமிழ் வேதங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே, கும்பாபிஷேக விழாவில் தமிழில் வேதங்கள் ஓத வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், செந்தமிழ் வேதங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 64 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பக்க வாத்தியங்களுடன், பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்