"கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் உறுதி"
தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் தெரிவித்தார். சென்னை பல்லவன் சாலையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சௌந்தர்ராஜன், பழைய ஓய்வூதிய திட்ட விவகாரத்தில் அடுத்த மாதம் 15-ஆம் தேதி தமிழக அரசின் குழு அறிக்கை தாக்கல் செய்வதாகவும், அதை பார்த்த பின்னர் அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடருவோம் என்றும் தெரிவித்தார்.