``எனக்கொரு பாராட்டு கூட்டம் சென்னையில் போட்டிருந்தால் மகிழ்ந்திருப்பேன்’’ உடைத்து பேசிய Ramadoss
நன்றி சொல்லாமல் நீதிமன்றம் சென்று விட்டார்கள் - பாமக ராமதாஸ்
விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்காக தனக்கு நன்றி தெரிவிக்க வேண்டியவர்கள், நன்றி சொல்லாமல் உச்ச நீதிமன்றம் சென்று விட்டதாக ராமதாஸ் கூறியுள்ளார். பட்டானூரில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இருக்கும் போது கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டால், 115 சாதியினர் பயன் பெற்றுள்ளனர் எனவும், அதற்கு அவர்கள் தனக்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும் ஆனால் மாறாக உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டார்கள் எனவும் தெரிவித்தார்.