விவசாயி மகளின் கனவை நனவாக்கிய `நான் முதல்வன்’.. சாதனை சரித்திரமான மாணவி
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்து, யுபிஎஸ்சி தேர்வில் 617-வது இடத்தைப் பிடித்த தாராபுரம் மாணவி மோகன தீபிகா, அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் வாழ்த்து பெற்றார். திருப்பூர் மாவட்டம், நந்தவனம் பாளையம் ஊராட்சி வெறுவேடம் பாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் சந்திரசேகர் - ராஜேஸ்வரி தம்பதியின் மகளாக பிறந்தவர், மோகன தீபிகா. பள்ளிக் கல்வியிலேயே தனது கனவாக இருந்த UPSC தேர்வில், வெற்றி பெற வேண்டும் என மன உறுதியுடன் படித்ததாகவும், தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் பயிற்சி நிலையம் உள்ளிட்டவைகள் தனது வெற்றிக்கு முழு முதல் காரணம் எனப் பெருமிதம் தெரிவித்தார்.