ஆவடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவர் தனது நண்பர் முரளியுடன் ஆட்டோவில் சென்றுள்ளார்ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் ஆட்டோவை யூ டர்ன் செய்ய முயற்சித்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழும் சமயத்தில் பூந்தமல்லியில் இருந்து ஆவடி நோக்கி வந்த அரசு பேருந்து வேகமாக மோதியது..இதில் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ சுக்கு நூறாகி சாலையில் பறந்தது..விபத்தில் கார்த்திக் மற்றும் முரளி பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசி டிவி கேமராவில் பதிவாகியுள்ளது தற்போது அது வெளியாகியது..