``நான் மாப்பிள்ளை வீட்ல என்ன சார் சொல்றது..'?' - மோசடி வலையில் சிக்கி நகையை பறிகொடுத்த பெண் கதறல்
தஞ்சாவூரில் பழைய நகைக்கு புதிய நகை தருவாதாக கோடிகணக்கில் மோசடி செய்த நகைக்கடை அதிபர் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் சீனிவாசபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர் அதே பகுதியில் மலேசியா சுந்தரம் என்கிற பெயரில் தனியார் நகைக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் பழைய நகைக்கு புதிய நகை வழங்கும் திட்டம், மாதந்திர நகை சீட்டு போன்ற திட்டங்கள் மூலம் நூற்றுக்கணக்கான பொது மக்களிடம் நகை மற்றும் பணத்தை பெற்று கொண்டு ராஜா தலைமறைவாகிவியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தஞ்சாவூா் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.